top of page

குருகுலராயன் கல்வெட்டுகள்_50 பகுதி_1 (25)


மலையரசி அங்காளி துணை

👆👆 ராஜகுல அகமுடையார் இனத்தின் முக்கிய அடையாளம் குருகுலராயன் என்பதற்கு சாட்சியாக கிபி 1932 சின்னத்தம்பி சேர்வை அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அகமுடையார் மாநாட்டு மலர் முன்னுரை படமுடன் இக்கட்டுறையை தொடங்குவதில் மகிழ்கிறோம்.. குருகுலராயன் அகமுடையார் உறவுகள் அனைவரும் தம் அரச மரபு பெயர் அனைத்திற்குமான விவரங்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் கருதி இத்தளத்தில் இதுவரை எழுதப்பட்ட முதல் மூன்று கட்டுரைகள் மிகமுக்கியம் வாய்ந்தவையாகும். அவற்றை வாசித்த அகமுடையார் உறவுகளுக்கு இக்கட்டுரையை பற்றிய விரிவான விளக்கம் தேவைப்படாது எனினும் சுருக்கமாக முன்னுரை; நாவலந்தீவின் அனைத்து அரச மரபும் சந்திரகுலம்,சூரியகுலத்தில் அடங்குவர். அதில், வாணாதிராயன் மற்றும் மலையமான் - குரு(சந்திர) குலத்தவர். கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில், கல்வெட்டுகளின் வாயிலாக தமிழக வரலாற்றில் "குருகுலராயன்" என அடையாளப்படுத்தப்பட்டவர் "மாவலி வாணர்" குலத்தவர் மட்டுமே. மாவலி வாணர் குலத்திற்கு பல்வேறு பெயர் இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை பெயர் "குருகுலராயர்" எனும் இப்பெயரேயாகும்.. ஆதலால் முதல் பகுதியான இதில் 25 கல்வெட்டுகளை காண்பாேம்; காண்பதற்கு முன், தமிழக அரசானையில் இன்றைய தேதி வரை, # அகம்படி # அகம்படியார் # அகம்படவன் மிலாடுடையார் # உடையார், என்ற நம்மினத்தின் நான்குவிதமான வரலாற்று சாெல்லாடல் பெயரையும் ஒருங்கே குறிக்கும் அகம்+உடையார் = "அகமுடையார்" என்ற பெயரை நம்மினத்தின் பெயராக, சாதி (BC) பட்டியலில் அரசாணையாக கொண்டுள்ள ஒரே இனம் அகமுடையார் நாம் மட்டுமே என்பதை நாம் நினைவில் காெள்ளவேண்டும். அதாவது தமிழ்சாதியில் ("குயவர்" உட்பட பல இனக்குழுக்களுக்கு) வேறு பலருக்கும் "உடையார்" என்பது பட்டமாக இருக்கலாம். ஆனால், அப்பெயரை (மிலாடு உடையார்) அரசாங்க ஆணையாக(Go no 1564 @1985) இனப்பெயராக உள்ளடக்கிய இனக்குழுவாக "வெட்டு மாவலி அகமுடையார்" சமூகமான நாம் மட்டுமே வாழ்கிறோம் என்பதை நினைவில் காெண்டு கட்டுரையை தாெடர்வாேம். கல்வெட்டு 1: பொன்பற்றி உடையான் அரையன் மூவாயிரத்தொருவனான குருகுலராயன், "குருகுலராயன்" என்றால் அது வாணாதிராயன் மற்றும் மலையமான் மட்டுமே என்பது வரலாறு. இக்கல்வெட்டு, முதலாம் குலாேத்துங்க சாேழன் காலம் கிபி 1111. அமராவதி மங்களத்தை சேர்ந்த "குருகுலராயன் அகமுடையார்" இனத்தை சேர்ந்தவன் திருநுந்தா விளக்கு வைத்த விவரத்தை கூறுகிறது.

bottom of page